Home apponly இந்தியாவில் ஹோலி கொண்டாட்டங்கள்

இந்தியாவில் ஹோலி கொண்டாட்டங்கள்

1304
0
SHARE
Ad

புதுடில்லி, மார்ச் 14 – இந்தியாவின் வட மாநிலங்களில் வண்ணமயமான ஹோலி பெருநாள் கொண்டாட்டங்கள் மிகவும் பிரபலம். சாலைகள் எங்கும் குழைத்து வைத்த வண்ணத்தை வாரி இறைத்து,  பார்ப்பவர்களின் முகங்களில் சரிசமமாகப் பூசி மகிழும் புதுமையான திருவிழா இது.

கடந்த வாரம் நடைபெற்ற மார்ச் 6ஆம் தேதி நடைபெற்ற ஹோலி திருநாள் கொண்டாட்டத்தின் போது இந்தியாவின் பல்வேறு நகர்களில் – அண்டை மாநிலங்களில் – பல்வேறு கோணங்களில் – வண்ணங்களில் எடுக்கப்பட்ட படக் காட்சிகள் இவை:

மஞ்சள் பூசுவதை மறந்துவிட்ட இன்றைய இளம் மங்கையர்கள் ஹோலியின் போது மஞ்சள் நிற வண்ணத்தைப் பூசிக் கொண்டு மகிழ்ந்திருக்கின்றனர். இது பெங்களூரில்...

#TamilSchoolmychoice

மஞ்சள் பூசுவதை மறந்துவிட்ட இன்றைய இளம் மங்கையர்கள் ஹோலியின் போது மஞ்சள் நிற வண்ணத்தைப் பூசிக் கொண்டு மகிழ்ந்திருக்கின்றனர். இது பெங்களூரில்…

பெங்களூரில் கொண்டாடப்பட்ட ஹோலியில் வெளிநாட்டுப் பயணிகளையும் விட்டு வைக்கவில்லை. வெளிநாட்டுப் பயணிகளில் சிலர் வண்ணம் குழைத்த உடல்களோடு உற்சாகத்தோடு தம்படம் (செல்பி) எடுத்து மகிழும் காட்சி

பெங்களூரில் கொண்டாடப்பட்ட ஹோலியில் வெளிநாட்டுப் பயணிகளையும் விட்டு வைக்கவில்லை. வெளிநாட்டுப் பயணிகளில் சிலர் வண்ணம் குழைத்த உடல்களோடு உற்சாகத்தோடு தம்படம் (செல்பி) எடுத்து மகிழும் காட்சி

இந்தியாவின் அண்டை இந்து நாடான நேப்பாளில் உற்சாகம் - துள்ளலுடன் ஹோலி கொண்டாட்டம்

இந்தியாவின் அண்டை இந்து நாடான நேப்பாளில் உற்சாகம் – துள்ளலுடன் ஹோலி கொண்டாட்டம்

கணவன் மனைவியோ - காதலன் காதலியோ - ஒருவருக்கொருவர் வண்ணக் குழைவை பூசி மகிழும் இந்தக் காட்சி வங்காளதேசத்தின் டாக்கா நகரில்...

கணவன் மனைவியோ – காதலன் காதலியோ – ஒருவருக்கொருவர் வண்ணக் குழைவை பூசி மகிழும் இந்தக் காட்சி வங்காளதேசத்தின் டாக்கா நகரில்…

கல்கத்தா நகரில் சிறுவன் ஒருவன் வண்ணம் பீச்சும் குழாயோடு அதிரடித் தாக்குதலுக்கு தயாராகும் காட்சி…கல்கத்தா நகரில் சிறுவன் ஒருவன் வண்ணம் பீச்சும் குழாயோடு அதிரடித் தாக்குதலுக்கு தயாராகும் காட்சி…

ஒவ்வொரு கரத்திலும் ஒவ்வொரு வண்ணம் - இது மும்பாயில் இளசுகளின் ஹோலி கொண்டாட்டம்

ஒவ்வொரு கரத்திலும் ஒவ்வொரு வண்ணம் – இது மும்பாயில் இளசுகளின் ஹோலி கொண்டாட்டம்…

நடுத்தர வயது மாமிகளையும் விட்டு வைக்கவில்லை தம்படம் (செல்பி) மோகம். போபால் நகரில் ஹோலி கொண்டாட்டத்தின்போது வண்ணம் பூசிய முகங்களுடன் செல்பி எடுத்து மகிழும் மாமிகள்

நடுத்தர வயது மாமிகளையும் விட்டு வைக்கவில்லை தம்படம் (செல்பி) மோகம். போபால் நகரில் ஹோலி கொண்டாட்டத்தின்போது வண்ணம் பூசிய முகங்களுடன் செல்பி எடுத்து மகிழும் மாமிகள்…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இளம் கல்லூரி மாணவிகள் ஒருவருக்கொருவர் கன்னங்களில் வண்ணம் பூசி மகிழ்கின்றனர். கைவிரல் நகங்களிலும் விரலுக்கொரு வண்ணம் பாருங்கள்....

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இளம் கல்லூரி மாணவிகள் ஒருவருக்கொருவர் கன்னங்களில் வண்ணம் பூசி மகிழ்கின்றனர். கைவிரல் நகங்களிலும் விரலுக்கொரு வண்ணம் பாருங்கள்….

ஹோலி கொண்டாட்டம் இந்திய இராணுவத்தினரையும் விட்டு வைக்கவில்லை. காஷ்மீரின்ஸ்ரீநகரில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினர் ஹோலி பெருநாளைக் கொண்டாடி மகிழும் காட்சி

ஹோலி கொண்டாட்டம் இந்திய இராணுவத்தினரையும் விட்டு வைக்கவில்லை. காஷ்மீரின்ஸ்ரீநகரில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினர் ஹோலி பெருநாளைக் கொண்டாடி மகிழும் காட்சி

ஹோலி குளிர் காலம் முடிவடையும் காலகட்டத்தில் கடைசி பவுர்ணமி தினத்தில் கொண்டாடப்படுகின்றது.

படங்கள்: EPA