Home இந்தியா நீதி என்றும் வெல்லும்: ஜெயலலிதா வழக்கு குறித்து கருணாநிதி கருத்து!

நீதி என்றும் வெல்லும்: ஜெயலலிதா வழக்கு குறித்து கருணாநிதி கருத்து!

796
0
SHARE
Ad

Karunanithi1சென்னை, மார்ச் 14 – ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நீதி என்றும் வெல்லும். எந்தக் குறுக்கு வழிகளாலும் அதைத் தடுக்க முடியாது என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ”குற்றவாளிகள் மீது கூறப்பட்டுள்ள புகார் உண்மையில்லை என்பதை உறுதி செய்வதற்கான எந்த ஆதாரத்தையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் காட்டப்படவில்லை.”

“அதனால் இந்தவழக்கை பொய் வழக்கு என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு ரூபாய் மாத ஊதியமாகப் பெற்ற ஜெயலலிதாவுக்கு 66 கோடி ரூபாய் சொத்து உள்ளது என்பதை லஞ்ச ஒழிப்புக் கண்காணிப்புத் துறை உறுதிப் படுத்தியுள்ளது.”

#TamilSchoolmychoice

“தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே உறுதி செய்ய வேண்டிய சூழ்நிலை தான் நிலவுகிறது. 65-க்கும் மேற்பட்ட வழக்குகளின் தீர்ப்புகளை தேவையில்லாமல் சுட்டிக்காட்டியும் கூட, 20 சதவிகித அளவுக்குக் கூட எதிர்த்தரப்பில் ஆதாரங்களோடு வாதாடவில்லை.”

“இறுதியில் உண்மைகளை ஆராய்ந்து அதற்கேற்றபடி தீர்ப்பு வழங்கப்படும். குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கும் எந்த ஆவணத்தையும், ஆதாரத்தையும் எதிர்த்தரப்பினர் தாக்கல் செய்யவில்லை.”

“தேவையான ஆதாரத்தைக் கேட்டும் கொடுக்காமலேயே எதிர்த்தரப்பினர் வாதத்தை நிறைவு செய்துள்ளார்கள். அரசுத் தரப்பில் 259 சாட்சிகளின் வாக்குமூலமும், புகார்கள் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் 2,341 ஆவணங்கள் தாக்கல் செய்து உறுதிப்படுத்தியுள்ளனர்”.

“நீதிபதி குன்ஹா கொடுத்த தீர்ப்பையே தானும் கொடுக்க வேண்டி வரும் என்றும்; கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி கருத்த தெரிவித்துள்ளார். தீர்ப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ளது”.

“பொறுத்திருப்போம்; நீதி என்றும் வெல்லும்; நிச்சயமாக வெல்லும்! எந்தக் குறுக்கு வழிகளாலும் அதைத் தடுக்க முடியாது!” என கருணாநிதி தெரிவித்துள்ளார்.