Home அவசியம் படிக்க வேண்டியவை மஇகா -வின் சொத்துக்கள் மஇகா -விடமே!  பழனிக்கு தெரியாதா? – டி.மோகன் கேள்வி

மஇகா -வின் சொத்துக்கள் மஇகா -விடமே!  பழனிக்கு தெரியாதா? – டி.மோகன் கேள்வி

556
0
SHARE
Ad

t.mohan

கோலாலம்பூர் மார்ச் 16 –  “மஇகா -வின் சொத்துக்கள் அனைத்தும் மஇகா வசம் இருக்கிறதே தவிர தனிநபரிடம் அல்ல. கட்சி உறுப்பினர்களும் இதில் அங்கம் பெற்றிருக்கிறார்கள் அப்படியிருக்கையில் கட்சியில் புதிதாக சேர்ந்த உறுப்பினரைப் போல கட்சியை பற்றி   எதுவுமே தெரியாது என்ற தோணியில் டத்தோஸ்ரீ பழனிவேல் அவர்கள் வீராப்பு பேசியிருப்பது ஏன்? என்று புரியவில்லை. இவர் எந்த சொத்துக்களை மீட்டெடுக்க போகிறார்?” என டத்தோ டி.மோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஒரு வேளை மஇகா – வினால் உருவாக்கப்பட்டு இன்று நம்முடையை  உறவு இல்லாமல் இருக்கும் என்.எல். எப். சி, நேசா ஆகியவற்றை இவர்  மீட்டெடுக்க போகிறாரா?  மஇகா-வின் சொத்துக்கள் அனைத்தும் முறையாக நிர்வகிக்கப்பட்டு சமுதாயத்திற்கு பயன்பட்டு வருகிறது.  எம்.ஐ.இ.டி மூலம் உருவாக்கப்பட்ட எய்ம்ஸ்ட் உட்பட மஇகா-வின்  சொத்துக்கள்  அனைத்தும் இந்திய சமுதாய நன்மைக்காகவே” என்றும் டி.மோகன் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், டி. மோகன் தனது பத்திரிகை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“கணக்கு காட்டாமல் மஇகா மாநாட்டில் நிதி மட்டும்  கோரப்பட்டு  பல மில்லியன்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக  இருக்கும்  கம்ப்யூனிட்டி பில்டர்ஸ் யாருடைய சொத்து? கோப்ராசி சூர்யா வின் நிலை என்ன? ரீச் அண்ட் டீச் கணக்கு வழக்குகள் எங்கே? இந்த கேள்விகளுக்கு முதலில்  பழனிவேல் விளக்கம் அளிப்பாரா?”

“முன்னாள் தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ  உத்தாமா ச. சாமிவேலு அவர்கள் எம்.ஐ.இ.டி க்கு தலைவராக இருக்கிறார். துணைத்தலைவராக டத்தோஸ்ரீ பழனிவேல் இருந்தார். இவர் டத்தோஸ்ரீ சாமிவேலு அவர்கள்  தான் எம்.ஐ.இ.டி க்கு  தலைவராக இருக்க வேண்டும் எனக்கூறி முதல் வாக்கு அளித்தார். கட்சிக்காக ஒரு வேலையும் செய்யாத இவர்  கட்சிப்பளு இருப்பதாக கூறி  எம்.ஐ.இ.டி யின் துணைத்தலைவர் பதவியில் இருந்தும் விலகினார்.  இது தான் கடந்த கால வரலாறு”

“மஇகா – வின் சொத்துக்களை தேர்தலுக்கு பிறகு மீட்டெடுப்பேன் என சொல்வதெல்லாம் சுத்தப்பொய். தனிநபரிடம் சொத்துக்கள் இருப்பதாக இருந்தால்,அந்த சொத்துக்கள் குறித்து பழனிவேலுக்கு தெரிந்திருந்தால்   நானும் தயார். அதனை இன்றே செயல்படுத்துவோம். சொத்துக்களை  மீட்டெடுக்க தேர்தல் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லையே!”

“தேர்தல் காலங்களில் மட்டும் வீரவசனம் பேசுவதிலும்,கொடுத்த வாக்கை மீறி நடப்பதிலும்,சொன்னதை மறந்து,மறைத்து பொய் பேசுவதிலும்  டத்தோஸ்ரீ பழனிவேல் வல்லவர். இது மஇகா -வினர் அறிந்ததே!  தோல்வி பயத்தின் காரணமாகவே இவர் இப்பொழுது சொத்துக்கள் மீட்டெடுப்பு என்கிற புதிய நாடகத்தை கையில் எடுத்து சமுதாயத்தை குழப்ப பார்க்கிறார்.” என்று டி.மோகன் கூறியுள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் பழனி கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறதா? என்பதை மஇகா -வினர் உணராமலா இருப்பார்கள். நான் முன்பு கூறியதை போல இவருக்கு சொல்வாக்கும், செல்வாக்கும் இல்லை அதனால் வெற்று வாக்குறுதி கொடுத்து யாரையும் ஏமாற்றி விட முடியாது இதனை டத்தோஸ்ரீ பழனிவேலுக்கு நினைவுப்படுத்துவதாக டத்தோ டி.மோகன் தமதறிக்கையில் பதிலடி கொடுத்துள்ளார்.