Home நாடு ஹாடி தலைமைத்துவத்தில் அதிருப்தி: பத்து பாஸ் கிளையின் 17 உறுப்பினர்கள் திடீர் ராஜினாமா!

ஹாடி தலைமைத்துவத்தில் அதிருப்தி: பத்து பாஸ் கிளையின் 17 உறுப்பினர்கள் திடீர் ராஜினாமா!

461
0
SHARE
Ad

pas 1கோலாலம்பூர், மார்ச் 16 – பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பத்து பாஸ் கிளையைச் சேர்ந்த 17 உறுப்பினர்கள் இன்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.

கட்சியின் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பத்து பாஸ் கிளையைச் சேர்ந்த 21 பேரில் 17 பேர் ராஜினாமா செய்துள்ளதாக அக்கிளையின் தலைவர் இசாக் சுரின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இசாக் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாஸ் கட்சியின் தலைமைத்துவத்தில் நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம். குறிப்பாக தலைவர், கட்சியில் நீண்ட காலமாக இருந்து வரும் பிரச்சனைகளைத் தீர்க்க எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தலைவராக இருப்பவர் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் வரை சென்று பிரச்சனைகள் குறித்து கலந்தாலோசித்து அதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கட்சியின் முக்கியப் பிரச்சனைகள் மூடி மறைக்கப்படுவதால் பெரும்பாலான உறுப்பினர்கள் பதவி விலகியதாகவும் இசாக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், பக்காத்தானின் மற்ற கூட்டணிக் கட்சிகளான பிகேஆர், ஜசெக ஆகியவற்றுடன் பாஸ் தலைவர் ஹாடி அவாங் நடந்து கொள்ளும் விதமும், கூட்டணியில் பிளவை ஏற்படுத்துவது போல் உள்ளதாக இசாக் கூறியுள்ளார்.

சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரத்தில் ஹாடி முடிவெடுக்க முடியாத நிலையில் தவித்ததைப் போல், பாஸ் மற்றும் பக்காத்தான் விவகாரத்திலும் அதே போல் நடந்து கொள்ள மாட்டார் என தாங்கள் நம்புவதாகவும் இசாக் தெரிவித்துள்ளார்.