Home நாடு மஇகா வழக்கு: விக்னேஸ்வரன் மூன்றாவது தரப்பாக வாதாட நீதிமன்றம் அனுமதி!

மஇகா வழக்கு: விக்னேஸ்வரன் மூன்றாவது தரப்பாக வாதாட நீதிமன்றம் அனுமதி!

815
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 16 – இன்று காலை பரபரப்பாகத் தொடங்கிய மஇகா-சங்கப் பதிவகம் இடையிலான வழக்கில், முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் (படம்) தன்னை மூன்றாவது தரப்பாக (Intervener) வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

S.A.Vigneswaran

அவரை மூன்றாவது தரப்பாக அனுமதிக்கக் கூடாது என கே.ராமலிங்கம் தரப்பு வழக்கறிஞர் செல்வம் சண்முகமும், தேசியத் தலைவர் பழனிவேல் மற்றும் சோதிநாதன் குழுவினரின் சார்பில் வழக்கறிஞர் சந்திராவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர் என இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

இருப்பினும் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற மஇகா தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவரான விக்னேஸ்வரன் இந்த வழக்கில் உள்ளே நுழைவதற்கு நீதிமன்றம் அனுமதியளிப்பதாக நீதிபதி முடிவு செய்துள்ளார்.

மஇகா – சங்கப் பதிவகம் இடையிலான வழக்கில் விக்னேஸ்வரனும் ஒரு தரப்பாக இணைந்திருப்பது இந்த வழக்கில் ஏற்பட்டுள்ள முக்கிய திருப்பம் என்று கருதப்படுகின்றது.

இதன் மூலம், தனது தரப்பு வாதங்களை விக்னேஸ்வரனும் நீதிமன்றத்தின் முன்வைக்க முடியும் என்பதோடு, கட்சி குறித்த மற்ற மஇகா சட்டவிதிகளையும், விவகாரங்களையும் கூட இனி நடைபெறும் வழக்கில் விக்னேஸ்வரன் முன் வைத்து வாதாட முடியும் என மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.

(மேலும் செய்திகள் தொடரும்)