Home உலகம் பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார் ராஜபக்சே!

பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார் ராஜபக்சே!

457
0
SHARE
Ad

Rajapaksa02கொழும்பு, மார்ச் 18 – இலங்கையில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பிரதமர் பதவியை குறிவைத்து அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்சே போட்டியிட முடிவு செய்துள்ளார்.

தனது கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சியின்  சார்பில் போட்டியிடாமல், இலங்கை தொழிலாளர் கட்சி வேட்பாளராக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.

இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை இலங்கை தொழிலாளர் கட்சி தலைவரான ஏ.எஸ்.பி. லியாங்கேவுடன் ராஜபக்சே நடத்திவருவதாக கூறப்படுகிறது. ராஜ்பக்சேவிடம் இருந்த இலங்கையின் சுதந்திர கட்சியின் தலைமைபதவியை தற்போது சிறிசேனா வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice