Home தொழில் நுட்பம் பேஸ்புக் மெசஞ்ஜரில் பணப்பரிமாற்ற வசதி!  

பேஸ்புக் மெசஞ்ஜரில் பணப்பரிமாற்ற வசதி!  

572
0
SHARE
Ad

facebook-messenger-free-downloadகோலாலம்பூர், மார்ச் 18 – பொழுதுபோக்கு அம்சங்களுக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த நட்பு ஊடகங்கள் வர்த்தக பயன்பாட்டிற்கும் ஆயத்தமாகி வருகின்றன. அதன் தொடக்கம் தான் பேஸ்புக் மெசஞ்ஜரில் அறிமுகமாகி உள்ளபணப்பரிமாற்ற வசதி.

பேஸ்புக் மெசஞ்ஜரில் நண்பர்கள் அளவளாவிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது ஒருவர் மற்றவரிடம், அவசரமாக 30 டாலர்கள் பண உதவி கேட்கிறார். உடனே பயனர், தனது பேஸ்புக் மெசெஞ்ஜரில் உள்ள ‘பே’ (Pay) வசதி மூலம் தனது நண்பருக்கு தேவையான பண உதவி செய்கிறார்.

இது சாத்தியமா என்றால், சாத்தியமே என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. மெசெஞ்ஜரில் பணப்பரிமாற்ற வசதியை இன்னும் சில மாதங்களில் அறிமுகப்படுத்த உள்ள பேஸ்புக்,

#TamilSchoolmychoice

“பயனர்கள் தங்கள் ‘விசா’ (Visa) மற்றும் ‘மாஸ்டர்கார்ட்’ (MasterCard) அட்டைகளின் விவரங்களை மெசஞ்ஜர் கணக்கில் ஒருமுறை பதிவு செய்து எளிதான முறையில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளது.

அண்டிரொய்டு, ஆப்பிள் மற்றும் கணினிகள் என அனைத்து தளங்களிலும் பேஸ்புக் மெசஞ்ஜர் பணப்பரிமாற்ற வசதி மேம்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.

எனினும், இந்த வசதி முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் அங்கு பெரும் வரவேற்பை பொறுத்து, உலக நாடுகளில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த பேஸ்புக் ஆயத்தமாகி வருவதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.