Home கலை உலகம் ‘விஸ்வரூபம்’ வழக்கை திரும்பப் பெற மாட்டேன் – கமல்ஹாசன்

‘விஸ்வரூபம்’ வழக்கை திரும்பப் பெற மாட்டேன் – கமல்ஹாசன்

581
0
SHARE
Ad

viswaroopam-tamil-movie-pictures-016சென்னை, மார்ச் 18 – 2013-ல் வெளியான படம் ‘விஸ்வரூபம்’. இப்படத்தின் வெளியீட்டில் பல தடங்கல்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் ஒரு பிரச்னையாக முதன்முறையாக டிடிஎச்-சில் ‘விஸ்வரூபம்’ படத்தை வெளியிடும் திட்டத்தில் இருந்தார் கமல்.

அதற்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். எனினும் திரையரங்கு அதிபர்கள் அதற்கு எதிர்ப்புகளை கிளப்பினர். பிறகு டிடிஎச்-சில் ஒளிபரப்பும் முடிவை கைவிட்டு திரையரங்குகளில் மட்டும் வெளியீடு செய்தார். அப்போது ’விஸ்வரூபம்’ படத்தை திரையிட திரையரங்கு அதிபர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.

இதனால் ‘இந்திய போட்டி ஆணையத்தில்’ கமல் புகார் செய்தார். தனது தொழில் உரிமையில் தலையிட்டு நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டி இருந்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்த ‘இந்திய போட்டி ஆணையம்’ உத்தரவிட்டது.

#TamilSchoolmychoice

திரையரங்கு உரிமையாளர்கள் ’விஸ்வரூபம்’ படத்துக்கு எதிராக இருந்தார்களா என்று விசாரணை நடத்தி முடித்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் திரையரங்கு அதிபர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் திரையரங்கு அதிபர்கள் சங்கத்தினர் கமலை சந்தித்து வழக்கை திரும்பப் பெறும்படி வற்புறுத்தியுள்ளனர். ஆனால் கமல் அதற்கு மறுத்து விட்டார். வழக்கை திரும்பப் பெற மாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டாராம்.