Home நாடு சீனாவில் 5 மலேசியர்கள் பலி: உடல்களை கொண்டு வர உறவினர்கள் தீவிர முயற்சி!

சீனாவில் 5 மலேசியர்கள் பலி: உடல்களை கொண்டு வர உறவினர்கள் தீவிர முயற்சி!

484
0
SHARE
Ad

20150317_jbbizmandead_rakyatpostஜோகூர் பாரு, மார்ச் 19 – விஷவாயு தாக்கி சீனாவில் உயிரிழந்த 5 மலேசிய வணிகர்களின் உடல்களை மலேசியா கொண்டு வர அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஜோகூர் பாரு சிறு வணிகர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டோனி டேய் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் பலியான ஐந்து பேரின் உறவினர்களும் புதன்கிழமை காலை சீனா சென்றடைந்ததாகவும், இதையடுத்து உடல்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

தண்ணீர் சூடுபடுத்தும் இயந்திரத்தில் இருந்து வெளியான நச்சு வாயுவை சுவாசித்ததால் ஜோகூர் பாரு சிறு வணிகர்கள் சங்கத்தின் தலைவரான சின் யோக் வெங் (60) மற்றும் சியா ஃபூ ஹெங் (48), தாய் சோங் சாய் (42), தான் பியான் சியாங் (41), நக் வெய் ஷன் (28) ஆகிய 5 பேரும் சீனாவின் நான்னிங் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கியிருந்த வேளையில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

#TamilSchoolmychoice

“சீனாவில் உள்ள மலேசியத் தூதரகம் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தேவையான உதவிகளைச் செய்து வருகிறது. இதற்காக மலேசியத் தூதரகத்திற்கும் ஜோகூர் மாநில சுற்றுலா, வணிகம் மற்றும் பயனீட்டாளர் விவகாரங்களுக்கான குழுவின் தலைவர் டத்தோ டீ சியூ கியோங்குக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பலியானோரின் குடும்பத்தார் சீனா செல்வதற்கு உடனடியாக விசா கிடைக்க டத்தோ டீ சியூ உதவினார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த சியா ஃபூ ஹெங்கின் மனைவி லிம் சிங் லிங் (46) தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையை மலேசியத் தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது,” என்றார் டோனி டேய்.