Home நாடு நாடாளுமன்றத்தில் பங்கேற்க அனுமதி மறுப்பு: அன்வார் மறுசீராய்வு மனு தாக்கல்!

நாடாளுமன்றத்தில் பங்கேற்க அனுமதி மறுப்பு: அன்வார் மறுசீராய்வு மனு தாக்கல்!

482
0
SHARE
Ad

????????????????????கோலாலம்பூர், மார்ச் 19 – நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க தன்னை அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அன்வார் சார்பில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரது வழக்கறிஞர்கள் சுரேந்திரன், லத்தீஃபா கோயா மற்றும் எரிக் பால்சன் ஆகியோர் புதன்கிழமை காலை இந்த மனுவை தாக்கல் செய்தனர்.

தமது மனுவில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாஹிட் ஹமிடி மற்றும் சிறைத்துறை ஆணையர் டத்தோஸ்ரீ சுல்கிஃப்ளி ஆகிய இருவரையும் அன்வார் பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க தனக்கு அனுமதி அளிக்க இயலாது என்று கூறி சுல்கிஃப்ளி மார்ச் 4-ம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அன்வார் கோரியுள்ளார்.

மேலும், ஏப்ரல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க தம்மை அனுமதிக்கும்படி சுல்கிஃப்ளிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வாரின் வழக்கறிஞர் சுரேந்திரன், “நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஏப்ரல் மாதமே முடிவடைய உள்ளதால் இந்த மனுவை அவசரமானதாகக் கருதி விசாரிக்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளோம்,” என்றார்.