Home வாழ் நலம் நீரிழிவு, உடல் பருமன், இதய நோய்களைத் தடுக்கும் சிறுதானியங்கள்!

நீரிழிவு, உடல் பருமன், இதய நோய்களைத் தடுக்கும் சிறுதானியங்கள்!

980
0
SHARE
Ad

Pulses-02a-770x472மார்ச் 20 – உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவுதான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக விளங்குகிறது.

இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதற்கு காரணம்  மாறி வரும் உணவுப் பழக்கம் தான். இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாற வேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

தானியங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றது. அரிசி, கோதுமை, பார்லி, வரகு, கம்பு, சோளம், சாமை போன்ற தானியங்களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

#TamilSchoolmychoice

இவற்றை சாப்பிட்டால் கொழுப்பு சத்து குறையும். உடல் பருமன்  ஏற்படாது என்கின்றனர். கம்பு, சோளம், வரகு, சாமை, கேழ்வரகு போன்றவை சிறுதானியங்கள். கிராமங்களில் இன்றைக்கு சிறு தானியங்களை சமைத்து சாப்பிடுபவர்கள் இருக்கின்றனர்.

அதனால் தான் அவர்களுக்கு நீரிழிவு, உடல் பருமன், இதயநோய் போன்றவை ஏற்படுவதில்லை. கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துகளும் உள்ளன. இது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

siruthanaiyam1உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும் வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனை குறைக்கும். சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம், சத்துக்கள் அடங்கி உள்ளன.

சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்கவல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுபுண்னை ஆற்றும், வாய் துர்நாற்றத்தை போக்கும், மூல நோயாளிகளுக்கு சோள உணவு உண்பது நல்லது.

வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்க கூடியது. தானியங்களில் அதிக சத்துமிக்க கேழ்வரகு ராகி என்றும் இதனை அழைக்கின்றனர்.

இதில் புரதம், தாது, உப்பு, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து மற்றும் உயிர்ச்சத்துகளும் இருக்கின்றன. இது உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும்.

Wooden spoons with different kinds of groats. Shallow dof.நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம், கேழ்வரகை கொண்டுதான் ராகிமால்ட் தயாரிக்கிறார்கள். நாம் உணவிற்கு பயன்படுத்தும் அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, சம்பா அரிசி, என பல வகை உள்ளது.

புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும், இதனால் உடல் பருமனாகும். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.