Home வாழ் நலம் ஆரோக்கியம் தரும் சிறுதானியங்கள்!

ஆரோக்கியம் தரும் சிறுதானியங்கள்!

2732
0
SHARE
Ad

ht1880நவம்பர் 1 – உடலுக்கு பொருத்தமான உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். தானியங்கள் என்றால் பெரும்பாலானவர்களுக்கு அரிசி, கோதுமை இரண்டு மட்டுமே தெரியும். பாரம்பரிய சிறு தானிய வகைகளை நாம் மறந்தே போனோம்.

சிறுதானியங்களில் நெல்லை போல வரகு, சாமை, தினை, குதிரை வாலி போன்றவைகளும் கம்பு, சோளம், ராகி போன்றவைகளும் உள்ளன. அரிசி, கோதுமையில் செய்வதை விட ருசி நிறைந்த உணவுகளை இந்த சிறு தானியங்களிலும் சமைத்து சுவைக்கலாம்.

சிறு தானியங்களில் இருக்கும் கார்போஹைட்ரேட் என்னும் மாவு பொருள் விரைவாக சர்க்கரையாக மாற்றப்படுவதில்லை. அவை மெதுவாக சர்க்கரையாக மாற்றப்படும் வகையை சார்ந்தவை. அதனால் இவற்றை சாப்பிடும் போது சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

சிறு தானிய உணவுகளில் நார்ச்த்து நிறைந்துள்ளது. அவை நீரில் கரையாத நார்சத்தாக இருப்பதால், மலச்சிக்கல் ஏற்படாது. பித்தப்பைகளில் கற்கள் உருவாவது தடுக்கப்படும். உடல் எடையும் குறையும். ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பின் அளவையும் குறைக்க உதவும்.

இரும்பு சத்து கால்சியம்,  மெக்னீசியம், பாஸ்பரஸ், போன்றவை மற்ற உணவு வகைகளைவிட சிறு தானியங்களில் அதிகம் உள்ளன. புரதம், வைட்டமின்களும் நிறைந்துள்ளன மைதா மாவு போன்றவைகளில் இருக்கும் குளுடின் என்ற பொருள் சிறுதானியங்களில் இல்லை. அதனால் உணவு ஒவ்வாமை ஏற்படுவதில்லை.

Nava dhaniyamசிறுதானியங்களில் நார்சத்து அதிகம் உள்ளதால் இதை ஜீரணிக்க சற்று நேரம் எடுக்கும். சிறு தானியங்கள் அதிகம் பட்டை தீட்டப்படுவதில்லை. அதனால் நமக்கு கூடுதல் நன்மை கிடைக்கும். நாம் சிறுதானியங்களை தொடர்ந்து சாப்பிடும் போது அதன் உண்மையை உணர்ந்து கொள்வோம்.

வயிற்றுக்கு தொந்தரவு தராது. சிறுதானியங்களுக்கு அழுத்தமான மேல் தோல் இருப்பதால் வேக சற்று அதிக நேரம் தேவைப்படும். நேரத்தை மிச்சப்படுத்த ஊற வைத்து சமைக்கலாம். கர்ப்பிணிகள் தாராளமாக சாப்பிடலாம். சிலருக்கு கருவுறும் காலத்தில் சர்க்கரை ரத்தத்தில் அதிகரிக்கும்.

அதை தடுப்பதற்கு மிகச்சரியான உணவு சிறுதானியங்கள் தான். அவைகளில் இருக்கும் இரும்பு, கால்சியம் சத்துகள் கர்ப்பிணிகளுக்கு மிக தேவையானவை. நான்கு மாத குழந்தை முதல் வயதானவர்கள் வரை எல்லோரும் சிறு தானியத்தை சாப்பிடலாம்.