டாங் வாங்கி காவல்நிலையத்திற்கு வாக்குமூலம் அளிக்கச் சென்ற அவரை காவல்துறை கைது செய்தது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் ஜிங்ஜாங் தடுப்புக்காவல் மையத்திற்கு தியான் சுவா கொண்டு செல்லப்பட்டார். நாளை சனிக்கிழமை காலை வரை அவர் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார்.
ஓரினப்புணர்ச்சி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை விடுதலை செய்யக்கோரி கடந்த வாரம் சனிக்கிழமை, கோலாலம்பூர் சோகோ வணிக வளாகத்திற்கு முன்பு ‘கிட்ட லவான்’ என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Comments