டிக்னே, மார்ச் 25 – ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் நேற்று விழுந்து நொறுங்கிய ஜெர்மன்விங்ஸ் விமானத்தில் இருந்த 150 பேரில், அர்ஜெண்டினா, அமெரிக்கா, கொலம்பியா, மெக்சிகோ, பெல்ஜியம்ம், ஜெர்மன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்துள்ளனர்.
அவர்களில் 47 பேர் ஸ்பானியர்கள், 67 பேர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் இரண்டு ஆஸ்திரேலியர்கள் இருந்தனர் என்று முதற்கட்ட விசாரணைகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் மீதமுள்ள மற்றவர்களின் அடையாளங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
மேற்கு ஜெர்மனைச் சேர்ந்த பள்ளி ஒன்றில் இருந்து 16 மாணவர்களும், இரண்டு ஆசியர்களும் அவ்விமானத்தில் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.