Home கலை உலகம் தமிழ் சினிமாவிற்கு 8 தேசிய விருதுகள்!

தமிழ் சினிமாவிற்கு 8 தேசிய விருதுகள்!

703
0
SHARE
Ad

11045461_10152901654138579_4018149976419260109_nபுதுடெல்லி, மார்ச் 25 – தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகையாக, கங்கனா ரனவ்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடிகராக கன்னட நடிகர் விஜய் தேர்வாகியுள்ளார்.

தமிழ் சினிமாவுக்கு மொத்தம் எட்டு விருதுகள் கிடைத்துள்ளன. இந்திய அளவில் சினிமா துறைக்கான தேசிய விருதை மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகிறது. சிறந்தப் படம், சிறந்த நடிகர், நடிகைகள், இயக்கம், ஒளிப்பதிவு என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31 வரை வெளியான திரைப் படங்களுக்கான விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. ‘குயின்’ என்ற இந்தி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, கங்கனா ரனவ்த் சிறந்த நடிகையாகத் தேர்வு செய்யப்பட்டார்.

#TamilSchoolmychoice

இவர் ஏற்கனவே 2010-ஆம் ஆண்டு ‘பேஷன்’ என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகை விருதைப் பெற்றிருந்தார். சிறந்த நடிகராக, ‘நானு அவனல்ல அவளு’ என்ற கன்னடப் படத்தில் நடித்த விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழுக்கு எட்டு விருதுகள் கிடைத்துள்ளன. பாபி சிம்ஹா (ஜிகிர்தண்டா) சிறந்த துணை நடிகராகவும், விவேக் ஹர்சன் (ஜிகிர்தண்டா) சிறந்த படத்தொகுப்பாளர்.

TamilDailyNews_5187145471573சைவம் படத்தில் இடம்பெற்ற அழகே அழகே பாடலுக்காக, சிறந்த பாடலாசிரியர் விருதுக்கு நா.முத்துக்குமாரும் இந்தப் பாடலை பாடிய உத்ரா உண்ணி கிருஷ்ணன் சிறந்த பாடகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிறுவர்களுக்கான படமாக, மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டையும் அதில் நடித்த விக்னேஷ், ரமேஷ் சிறந்த குழந்தை நட்சத்திரமாகவும் தேர்வாகி உள்ளனர். தமிழில் சிறந்த படமாக, ‘குற்றம் கடிதல்’ படம் தேர்வாகி உள்ளது.

யுடிவி தனஞ்செயன் எழுதிய ‘பிரைட் ஆஃப் தமிழ் சினிமா’ சிறந்த சினிமா நூலுக்கான விருதை பெற்றுள்ளது. இந்த, 62-வது தேசிய திரைப்பட விருதுகளின் தேர்வுக் குழுவுக்கு இயக்குனர் பாரதிராஜா தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மே மாதம் 3-ஆம் தேதி, டெல்லி விக்யான் பவனில் நடிக்கும் விழாவில் அதிபர் பிரணாப் முகர்ஜி இந்த விருதுகளை வழங்க இருக்கிறார்.