Home உலகம் ஜெர்மன்விங்ஸ் விபத்து: 2 ஹெக்டர் அளவிற்கு சிதறிக் கிடக்கும் பாகங்கள்!

ஜெர்மன்விங்ஸ் விபத்து: 2 ஹெக்டர் அளவிற்கு சிதறிக் கிடக்கும் பாகங்கள்!

565
0
SHARE
Ad

டிக்னே, மார்ச் 25 – ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விபத்திற்குள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் பாகங்களும், பயணிகளின் சடலங்களும் சுமார் இரண்டு ஹெக்டர் பரப்பளவிற்கு சிதறிக் கிடைப்பதாக அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், விமானத்தின் பெரிய பாகங்கள் என சிலவற்றை மட்டுமே மீட்புக்குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

????????????????????????????

#TamilSchoolmychoice

காரணம், விமானம் விழுந்து நொறுங்கியதில் சுக்கு நூறாகிவிட்டதாகக் கூறப்படுகின்றது. சிதறிய விமான பாகங்களுக்கு நடுவே பயணிகளின் சிதறிய சடலங்களைக் கண்டறிந்து அடையாளம் காண்பது மிகவும் கடினம் என்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.