அதற்காக பல்வேறு பரிசோதனைகளுக்கு பின் இறுதியாக 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அமெரிக்கா புளோரிடா பல்கலைக்கழகத்தில் படிக்கும் தரஞ்ஜித் சிங் பாட்டியா (29), துபாயில் வசிக்கும் ரித்திசாகிங் (29), கேரளாவை சேர்ந்த சாரதா பிரசாத் (19) ஆகிய 3 இந்தியர்களும் அடங்குவர்.
செவ்வாய் கிரகத்துக்கு முதலாவதாக 4 பேரை வருகிற 2024–ஆம் ஆண்டில் அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்துக்கு ஆள் அனுப்புவதில் 2 ஆண்டுகள் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புவதற்கான பணியும் மிகவும் மெதுவாக நடைபெறுகிறது. அதனால்தான் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என தனியார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாஸ் லேண்ட்ஸ்ட்ராப் தெரிவித்துள்ளார்.