Home கலை உலகம் ‘உத்தம வில்லன்’ என் வாழ்வில் நான் மறக்க முடியாத படம் – கமல்

‘உத்தம வில்லன்’ என் வாழ்வில் நான் மறக்க முடியாத படம் – கமல்

512
0
SHARE
Ad

kamalசென்னை, மார்ச் 25 – நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளிவர உள்ள ‘உத்தம வில்லன்’ படம் பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:-

“உத்தமவில்லன் படம் வெளியாவதற்கு முன்பு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எத்தனை படங்கள் நான் நடித்திருந்தாலும், இந்த படம் என் வாழ்வில் நான் மறக்க முடியாத படம். என்னுடைய குருநாதர் கே.பி. பாலச்சந்தர் கடைசியாக நடித்த படம் என்பதால் இந்த படம் இப்போது மிகப்பெரிய படமாக உயர்ந்துள்ளது”.

“படம் துவங்குவதற்கு முன்பாக அவரிடம் சென்று இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். உடனே அவர், ‘உனக்கு படத்தை பாதியில் நிறுத்த வேண்டுமா?’ என்று கேட்டார். என்னை விட நல்ல, வயதான நடிகர்கள் உள்ளனர். அவர்களை வைத்து எடுத்துக்கொள் என்றார்”.

#TamilSchoolmychoice

“அதற்கு நான் ’நீங்கள்தான் வயதான இளைஞன்’ என்று கூறி அடம்பிடித்து நடிக்க சொல்லவே வேகமாக நடித்தார். உடனே பின்னணி குரல் பேசவும் ஏற்பாடு செய்ய சொன்னார். அதையும் செய்தேன். அதன்பிறகு படத்தை பார்க்க வேண்டும் என்றார், போட்டு காண்பித்தேன்”.

“படத்தை பார்த்துவிட்டு அருமை என்று சொல்லிவிட்டு, ‘என் வேலை முடிந்துவிட்டது, இனி உன் வேலையை தொடங்கு’ என்றார். நான் பட வேலையாக அமெரிக்கா சென்றேன். அந்த சமயத்தில் கே.பி. பாலச்சந்தர் நம்மைவிட்டு மறைந்துவிட்டார். இருப்பினும் அவர் எண்ணத்தை இறுதி வரை கொண்டுசெல்வேன்” என்றார்.

மேலும், ‘லிங்கா’ படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு வினியோகஸ்தர்களுக்கு  நஷ்டஈடு கொடுத்த விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு, கமல்ஹாசன்  எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் தணிக்கை அதிகாரிகளின் போக்கிற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.