கலிபோர்னியா: பெர்சவரன்ஸ் ரோவர் முதல் முறையாக செவ்வாய் கிரகத்தில் நகரத் தொடங்கியப் படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
சுமார் மொத்தம் 6.5 மீட்டர் அல்லது 21 அடி அது நகர்ந்துள்ளது.
ஆனால், இது ஒரு முக்கியமான தருணம் என்று நாசாவின் துணை திட்ட விஞ்ஞானி கேட்டி ஸ்டாக் மோர்கன் கூறினார்.
“ரோவர் இன்னும் நிறைய பொறியியல் சோதனைகளைச் செய்து கொண்டிருக்கும் நிலையில், அது நகரத் தொடங்கும்,” என்று அவர் பிபிசி செய்திக்குத் தெரிவித்தார்.
ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி இரண்டு வாரங்கள் ஆகின்றன.