Home One Line P1 அரசு நிறுவனங்களை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தப்படுவதை நிறுத்தவும்!

அரசு நிறுவனங்களை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தப்படுவதை நிறுத்தவும்!

717
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கூட்டணிக்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அழுத்தம் கொடுக்க அரசு நிறுவனங்களைப் பயன்படுத்த முயற்சிகள் இருப்பதாக நம்பிக்கை கூட்டணி தெரிவித்துள்ளது.

“அரசியல் ஆயுதங்களாக” பயன்படுத்தப்படும் அரசு நிறுவனங்களில் காவல் துறை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) மற்றும் உள்நாட்டு வருமான வரி வாரியம் ஆகியவை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கியது என்பது புரிந்து கொள்ளப்படுவதாக அது கூறியது.

“இந்த நேரத்தில், பிரதமர் மொகிதின் யாசினுக்கு ஆதரவை வெளிப்படுத்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுப்பதோடு, அது தொடர்பாக இன்னும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

#TamilSchoolmychoice

“கொள்கையளவில், சட்டம் மற்றும் ஒழுங்கை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு செயலையும் நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், நேரடி அரசியல் எதிரியை துன்புறுத்தவோ, ஒடுக்கவோ அல்லது அச்சுறுத்தவோ செய்யும் நோக்கத்துடன் அரசு நிறுவனத்தை துஷ்பிரயோகம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் மன்றம் ஓர் அறிக்கையில் கூறியது.

பி.கே.ஆரைச் சேர்ந்த செகிஜாங் நாடாளுமன்ற உறுப்பினர், நத்ரா இஸ்மாயில் சமீபத்தில் மார்ச் 3-ஆம் தேதி இரண்டு நபர்கள் தம்மை சந்தித்ததாக கூறினார். மொகிதின் யாசினை ஆதரிப்பதில் ஆர்வம் உள்ளாரா என்று அவரிடம் கேட்கப்பட்டதாகக் கூறியிருந்தார்.