Home One Line P1 பெர்சாத்துவுடன் ஒத்துழைப்பு இல்லை என்பது கட்சியின் முடிவு

பெர்சாத்துவுடன் ஒத்துழைப்பு இல்லை என்பது கட்சியின் முடிவு

628
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடனான ஒத்துழைப்பை நிராகரிக்க அம்னோ எடுத்த முடிவு எந்தவொரு தனிநபராலும் எடுக்கப்படவில்லை என்று கட்சித் துணைத் தலைவர் முகமட் ஹசான் கூறினார்.

100- க்கும் மேற்பட்ட தொகுதிகள் பெர்சாத்துவுடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டாம் என்று அம்னோவை வலியுறுத்தியதாகவும் அது தனிப்பட்ட முடிவு அல்ல என்றும் முகமட் கூறினார்.

“அம்னோ ஒரு முதிர்ச்சியான கட்சி. இந்த நிராகரிப்பு எவராலும் தூண்டபப்டவில்லை. அடுத்த தேர்தலின் போது அம்னோ பெர்சாத்துவுடன் இருக்காது. இது ஒன்று அல்லது இரண்டின் முடிவு அல்ல, ஆனால், 100 க்கும் மேற்பட்ட தொகுதிகளின் முடிவு,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணி முன்னாள் செயலாளர் அனுவார் மூசாவின் அறிக்கை குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாறு கூறினார். முன்னதாக, அனுவார் மூசா, அம்னோ இப்போது அன்வார் இப்ராகிமின் செல்வாக்கின் கீழ் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில், முவாபாக்காட் நேஷனலை வலுப்படுத்த பாஸ் உடன் இணைந்து பணியாற்ற அம்னோ உறுதியுடன் இருப்பதாக அவர் கூறினார்.