Home One Line P1 தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்: பாஜக 20 தொகுதிகளில் போட்டி

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்: பாஜக 20 தொகுதிகளில் போட்டி

749
0
SHARE
Ad

சென்னை: தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கட்சிகளுக்கிடையிலான தொகுதி ஒதுக்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தைகள இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன.
அவ்வகையில் அதிமுக- பாஜக கூட்டணி தொகுதி ஒதுக்கீட்டு பேச்சுவார்த்தையின் இறுதி முடிவில், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜகவுடன் கூட்டாணி வைத்து தேர்தலை சந்திக்க இருப்பதாகவும், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அதே தேதியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்படவுள்ளதால், பாஜக வேட்பாளருக்கு அதிமுக முழு ஆதரவையிம் வழங்கும் என்று அக்கடிததில் பதிவிடப்பட்டுள்ளது.