Home One Line P1 அம்னோ, அன்வார் இப்ராகிம் செல்வாக்கின் கீழ் உள்ளது

அம்னோ, அன்வார் இப்ராகிம் செல்வாக்கின் கீழ் உள்ளது

842
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோவும், பிகேஆரும் நேற்று ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிட்டதாக அனுவார் மூசா குறிப்பிட்டு, ​​அம்னோ இப்போது எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் செல்வாக்கின் கீழ் இருப்பதாகக் கூறினார்.

கொவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பது, 2021 வரவு செலவு திட்டத்தை அமல்படுத்துதல் மற்றும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது பொருளாதார மீட்சி, ஆகியவற்றை இரண்டு அறிக்கைகளும் குறிப்பிட்டுள்ளன.

மேலும், அவசரகால பிரகடனத்தின் போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்ற உந்துதல் தொடர்பாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததை அனுவார் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“தலைவர் இப்போது நம்பிக்கை கூட்டணி கட்டுப்பாட்டில் உள்ளார் என்பதற்கு இது மற்றொரு சான்று. அன்வார் மற்றும் ஜசெக ஆகியோரை ஆதரிக்காத கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக இது உள்ளது,” என்று அவர் கூறினார்.