Home One Line P1 சிறார் திருமணம், ஒருதலைப்பட்ச மத மாற்றத்தை அரசு தடை செய்ய வேண்டும்- மசீச

சிறார் திருமணம், ஒருதலைப்பட்ச மத மாற்றத்தை அரசு தடை செய்ய வேண்டும்- மசீச

653
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிறார் திருமணம் மற்றும் எந்தவொரு பெற்றோரும் தங்கள் குழந்தையின் மதத்தை ஒருதலைப்பட்சமாக மாற்றுவதை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மசீச மகளிர் பகுதி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அதன் தலைவர் ஹெங் சீ கீ கூறுகையில், பெண்கள் உரிமைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் இவை என்று இன்று மசீச மகளிர் பிரிவு ஆண்டு பொதுக் கூட்டத்தில் தனது கொள்கை உரையில் கூறினார்.

“18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகள் தங்கள் வாழ்க்கையை அனுபவிப்பதிலும், படிப்பிலும் கவனம் கொண்டிருப்பர் என்று நாங்கள் நம்புகிறோம். அவர்கள் திருமணத்திற்கு உகந்தவர்கள் அல்ல, அவர்களின் மனதை மனரீதியாக முதிர்ச்சியடையவோ அல்லது தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கத் தயாராக இல்லை. மேலும், சிறுவர் சட்டம் 2001 இன் படி, 16 வயதிற்கு உட்பட்ட ஒரு சிறுமியுடன் உடலுறவு கொள்ளும் எவரும், அதற்கு சம்மதித்தாலும் இல்லாவிட்டாலும், கற்பழிப்பு குற்றத்தைச் செய்துள்ளார்,” என்று அவர் மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

இதைக் கருத்தில் கொண்டு, சிறார்பாதுகாப்பு மற்றும் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாக்க கூட்டரசு சட்டத்தின் கீழ் சிறார் திருமணத்தை குற்றவியல் குற்றமாக மாற்ற மகளீர் பரிந்துரைப்பதாக ஹெங் கூறினார்.