பாரிஸ், மே 7 – ஜெர்மன் விங்ஸ் விமானத்தை ஆல்ப்ஸ் மலையில் மோதுவதற்கு முன் அது தொடர்பாக அந்த விமானத்தின் துணை விமானி பலமுறை ஒத்திகை பார்த்தது தற்போது தெரிய வந்துள்ளது.
பிரான்சில் உள்ள விமான விபத்து புலனாய்வு முகைமையகம் வெளியிட்ட இடைக்கால
அறிக்கையில் இந்ந விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலையில் மோதி சிதறுண்ட விமானத்தின் தரவுகளில் இருந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.ஜெர்மனியில் இருந்து ஸ்பெயின் சென்று பின்னர் நாடு திரும்பும்போது குறிப்பிட்ட அந்த விமானம் மலையில் மோதியது.
முன்னதாக ஸ்பெயின் நோக்கிச் சென்றபோது விமானம் 100 அடியில் பறப்பதற்கு ஏற்ப ஒத்திகை பார்த்துள்ளார் துணை விமானி ஆன்ட்ரியல் லூபிட்ஸ்.
அச்சமயம் விமானிகளுக்கான அறையில் இருந்து தலைமை விமானி வெளியே சென்றபோது,சுமார் 5 நிமிடங்கள் அங்கு தனியே இருந்துள்ளார் லூபிட்ஸ்.
அச்சமயம் விமானத்தை வெறும் 100 அடி உயரத்தில் செலுத்த அவர் ஒத்திகை
பார்த்துள்ளார்.இது தொடர்பான கட்டளைகளை அவர் பிறப்பித்தது தெரிய வந்துள்ளது.
5 நிமிடங்களுக்குப் பின்னர் தலைமை விமானி மீண்டும் விமானிகளுக்கான அறைக்கு திரும்பியுள்ளார்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விமானம்
பறக்கும் உயரத்தை குறைக்குமாறு லூபிட்சுக்கு தகவல் வந்துள்ளது.
இதையடுத்து அதன் உயரத்தை முதலில் 100 அடி குறைத்த லூபிட்ஸ், பின்னர்
49 ஆயிரம் அடிக்கு மாற்றி, கடைசியாக 35 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தை
நிலைநிறுத்தி உள்ளார்.
2 நிமிடங்களுக்கெல்லாம் மீண்டும் விமானம் பறக்கும் உயரத்தை 100 அடி
குறைத்து பின்னர் 25 ஆயிரம் அடியில் நிலைநிறுத்தி உள்ளார்.
இச்சமயம் விமானம் 100 அடி உயரம் அளவிற்கு கீழே இறங்காவிட்டாலும் கூட, அது
தொடர்பான கட்டளைகளை பிறப்பித்து ஒத்திகை பார்த்துள்ளார் லூபிட்ஸ்.
தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து உயரத்தைக் குறைக்க உத்தரவு
வந்தபடியால், தலைமை விமானி மீண்டும் விமானிகளுக்கான அறைக்கு
திரும்பியபோது, அவருக்கு லூபிட்ஸ் மீது சந்தேகம் எழவில்லை எனக்
கூறப்படுகிறது.
இதையடுத்து அதே விமானம் ஸ்பெயினில் இருந்து ஜெர்மனி திரும்பியபோது தலைமை
விமானி, விமானிகளுக்கான அறையில் இருந்து வெளியே சென்ற வாய்ப்பை
பயன்படுத்தி, விமானத்தை மிகக் குறைந்த உயரத்தில் பறக்கச் செய்து ஆல்ப்ஸ்
மலை மீது லூபிட்ஸ் மோதியதாக அந்த இடைக்கால அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.