Home இந்தியா இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்!

இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்!

522
0
SHARE
Ad

o-panneerselvamசென்னை, மார்ச் 25 – இன்று தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான கூட்டம் பிப்ரவரி 17-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் பிப்ரவரி 23-ஆம் தேதி வரை நடந்தது.

இன்று மீண்டும் சட்டசபை கூடுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 2015-16-ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

பின்னர் பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யும். முதலில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். அதை தொடர்ந்து துறை ரீதியான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும்.

#TamilSchoolmychoice

இதில் அந்த துறைக்கு தேவையான நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிக்கப்படும். பட்ஜெட் விவாதம் நிறைவு பெற்றதும் அதற்கு முதல் – அமைச்சர் பன்னீர் செல்வம் பதில் அளிப்பார்.

துறை ரீதியாக விவாதத்துக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். இந்த கூட்டத்தொடர் ஒரு மாதம் நடைபெறலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.