பாரிஸ், மார்ச் 25 – ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கிய ஜெர்மன் விங்ஸ் விமானப் பாகங்களையும், மரணமடைந்தவர்களின் சடலங்களையும் மீட்பதற்காக நூற்றுக்கணக்கான மீட்புக் குழுவினர் அந்தப் பகுதிக்கு விரைந்துள்ளனர்.
மீட்புப் பணிக்குப் புறப்படத் தயாராகும் பிரெஞ்சு ஹெலிகாப்டர்கள்…
விழுந்து கிடக்கும் பாகங்களில் மிகப் பெரிய பாகம் ஒரு கார் அளவுக்கு மட்டுமே உள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தப் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, ஆறே நிமிடங்களில் 4,200 மீட்டர் கீழ்நோக்கி விமானம் தாழப் பறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏன் என்ற ரீதியில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இறுதித் தகவல்களின்படி விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.