Home உலகம் 2015-ன் இறுதியில் நோட்டோ ஆப்கனை விட்டு வெளியேறுகிறது! 

2015-ன் இறுதியில் நோட்டோ ஆப்கனை விட்டு வெளியேறுகிறது! 

591
0
SHARE
Ad

nato_troops_leave_afghanistan_2012-11-09வாஷிங்டன், மார்ச் 26 – ஆப்கனில் தனியாட்சி அமைக்க முயன்ற தலிபான்களை ஒடுக்குவதற்காக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை அங்கு இயங்கி வந்தது. பின்னர், கடந்த ஆண்டு இறுதியில் ஆப்கனில் ஜனநாயகம் மலர்ந்ததால், அந்நாட்டு இராணுவம் உள்நாட்டு பாதுகாப்பிற்கான பொறுப்பை நோட்டோவிடமிருந்து ஏற்றது.

எனினும், தற்போதும் 9,800 அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் இந்த ஆண்டு இறுதிக்குப்பிறகு அங்கிருந்து வெளியேறுவர் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை நேற்று முன்தினம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய் ஆட்சிக் காலத்தில் தலிபான்களை ஒடுக்குவதற்கும் உள்நாட்டு பாதுகாப்பை மேற்கொள்வதற்கும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை ஈடுபட்டு வந்தது.

#TamilSchoolmychoice

பின்னர் படிப்படியாக ஆப்கன் இராணுவத்தினருக்கும் அந்நாட்டு காவல்துறையினருக்கு உள்நாட்டு பாதுகாப்பில் நேட்டோ படை பயிற்சி அளித்தது. கடந்த ஆண்டு இறுதியில் ஆப்கன் இராணுவம் உள்நாட்டு பாதுகாப்பை ஏற்றதால், இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த நேட்டோ படை விலகியது.

எனினும், தற்போது ஆப்கனில் 9,800 அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், புதிய அதிபரான அஷ்ரப் கானி நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆப்கனின் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து விவாதங்கள் நடைபெற்றன.

அப்போது தலிபான்களின் தற்கொலை படை தாக்குதலை சமாளிக்க ஆப்கன் வீரர்களுக்கு போதிய பயிற்சி தேவைப்படுவதால், அமெரிக்க வீரர்கள் மேலும் சில ஆண்டுகள் ஆப்கனில் இருக்க வேண்டும் என்று அஷ்ரப் கானி வேண்டுகோள் விடுத்தார்.

marching_paஇதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் இருக்கும் 9,800 அமெரிக்க வீரர்களும் இந்த ஆண்டு இறுதி வரை தங்களது பணியை மேற்கொள்வார்கள், அதன்பின் வெளியேறுவார்கள் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரம் தகவல் வெளியிட்டது.

இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பணயம் வைக்கப்படுகின்றனர் என்று அமெரிக்காவின் ஆயுத சேவைகள் குழுவின் உறுப்பினரும் குடியரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாக் தோம்ப்ரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், நோட்டோ படைக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரிலும், ஆப்கனில் தலிபான்களுக்கு எதிரான போரிலும் அமெரிக்க வீரர்கள் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.