Home கலை உலகம் விஜய்க்கு ‘புலி’ – விஷாலுக்கு ‘பாயும் புலி’!

விஜய்க்கு ‘புலி’ – விஷாலுக்கு ‘பாயும் புலி’!

599
0
SHARE
Ad

Vijayசென்னை, மார்ச் 27 – சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்துக்கு ‘பாயும் புலி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘புலி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

’பாண்டிய நாடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சுசீந்திரனும், விஷாலும் மீண்டும் இணைந்துள்ள படம் இது. இப்படத்துக்கு ‘பாயும் புலி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

சமுத்திரக்கனி விஷாலுக்கு அண்ணனாக நடிக்கிறார் என விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். பெங்களூருவைச் சார்ந்த புதுமுகம் வில்லனாக நடிக்கிறார்.

#TamilSchoolmychoice

சூரி, ஆனந்த் ராஜ் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வேந்தர் மூவிஸ் மதன் இப்படத்தைத் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இத்திரைப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீபகாலமாக 80-களின் வெளிவந்த படங்களின் தலைப்பை கொஞ்சம் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகீறது. சிவகார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’ தற்போது ‘பாயும் புலி’ , என பழைய படங்களின் மீது நடிகர்களுக்கு சற்றே ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.