Home உலகம் தனிமையில் வாடிய பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்!- பாதுகாவலர் பேட்டி

தனிமையில் வாடிய பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்!- பாதுகாவலர் பேட்டி

864
0
SHARE
Ad

pibagaran-sonஇலங்கை, மார்ச்.4- இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரன், வீட்டில் பெரும்பாலும் நண்பர்களின் துணையின்றி தனியாகத்தான் இருப்பார் என்று அவருடன் இருந்த பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

பாலச்சந்திரனின் சகோதரர் சார்ல்ஸ் அந்தோணி கணினியிலேயே அதிகம் இணைந்திருப்பார். அவரது சகோதரி துவாரகா புத்தகம் படித்துக் கொண்டிருப்பார். அதனால் வீட்டில் இருக்கும்போது, பாலச்சந்திரன் தனிமையில்தான் இருப்பார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக மற்ற சிறுவர்களுடன் விளையாட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று கொழும்பில் இருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பெயர் கூற விரும்பாத பாலச்சந்திரனின் பாதுகாவலர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

வீட்டில் தனியாகவே இருப்பதால், எங்களை அவருடன் விளையாட அழைப்பார். அதற்கு நாங்கள் மறுத்தால் வீட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று மிரட்டுவார்.

விறகு சேகரிக்க நாங்கள் சென்றால் கூட, எங்களுடன் வருவேன் என்று வற்புறுத்துவார். வேறு வழியின்றி நாங்களும் அழைத்துச் செல்வோம்.

தாய் மதிவதனி தயார் செய்யும் உணவு பாலச்சந்திரனுக்குப் பிடிக்கவில்லை. சாப்பிடும் நேரத்தில் வீட்டைத் தவிர்த்து, விடுதலைப் புலிகள் கொண்டு வரும் உணவை உட்கொள்ள வேண்டி, பாதுகாப்பு நிலைக்கு வந்து விடுவார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.