Home உலகம் அடுத்த 72 மணி நேரத்தில் பிலிப்பைன்சை தாக்கவிருக்கும் அதிவேகப் புயல்!

அடுத்த 72 மணி நேரத்தில் பிலிப்பைன்சை தாக்கவிருக்கும் அதிவேகப் புயல்!

686
0
SHARE
Ad

மணிலா, ஏப்ரல் 1 – வட பசிபிக் பெருங்கடலில் உருவான சக்திவாய்ந்த அதிவேக புயல் ஒன்று அடுத்த 72 மணி நேரத்தில் பிலிப்பைன்ஸ் தீவுகளை தாக்கவுள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

typhoon-maysak

இதனால், பிலிப்பைன்ஸ் அரசு, மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை தயார்படுத்தி வருகின்றது.

#TamilSchoolmychoice

‘சூப்பர் தைப்பான் மேசக்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அப்புயல் கடந்த மார்ச் 27-ம் தேதி, வெப்பமண்டல அழுத்தம் காரணமாக உருவானது என்றும், அடுத்த சில நாட்களில் 5 வது பிரிவில் வகைப்படுத்தும் அளவில் அப்புயல் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தை அடைந்து வலுப்பெற்றுள்ளது என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

வரும் சனிக்கிழமை, அப்புயல் பிலிப்பைன்ஸ் தீவுகளில் கரையைக் கடக்கும் போது அதன் பலம் சற்று குறையலாம் என்றும், எனினும் இந்த தாக்குதலில் சில சேதாரங்கள் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வரும் ஞாயிறுக்கிழமை பிலிப்பைன்ஸ் மக்கள் ஈஸ்டர் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருவதால், அவர்களை எச்சரித்து தயார்படுத்துவதில் அந்நாட்டு அரசு சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றது.