Home நாடு பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்: பினாங்கை சேர்ந்தவரை நிறுத்த அம்னோ முடிவு!

பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்: பினாங்கை சேர்ந்தவரை நிறுத்த அம்னோ முடிவு!

707
0
SHARE
Ad

ஜார்ஜ் டவுன், ஏப்ரல் 2 – பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பாக பினாங்கை சேர்ந்த ஒருவரை நிறுத்த பினாங்கு மாநில அம்னோ முடிவு செய்துள்ளது.

Datuk-Seri-Zainal-Abidin-Osman1

இது குறித்து பினாங்கு மாநில அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சைனல் அபிடின் ஒஸ்மான் கூறுகையில், “பினாங்கை சேர்ந்த நல்ல கல்விப் பின்புலம் கொண்டவர்களின் பட்டியல் கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. நிறைய புதியவர்கள் தகுதியானவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் இப்போது அவர்களின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இயலாது” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பெர்மாத்தாங் பாவ் அம்னோவுடன் கலந்தாலோசித்து அந்தப் பட்டியல் தயாரிக்கப்படும் என்றும் சைனல் குறிப்பிட்டுள்ளார்.

பெர்மாத்தாங் பாவ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், எதிர்கட்சித் தலைவருமான அன்வார் இப்ராகிம் ஓரினப்புணர்ச்சி வழக்கில் 5 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது அரச மன்னிப்பு மனுவும் நேற்று நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால், அவர் தனது நாடாளுமன்ற தொகுதியை இழந்துள்ளார். இதன் காரணமாக பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.