Home நாடு நிபோங் திபால் – பெர்மாத்தாங் பாவ் – அன்வார் எங்கே போட்டியிடுவார்?

நிபோங் திபால் – பெர்மாத்தாங் பாவ் – அன்வார் எங்கே போட்டியிடுவார்?

1131
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் போட்டியிடவிருக்கும் நாடாளுமன்றத் தொகுதி அடுத்தவாரம் அறிவிக்கப்படும் என அவரது துணைவியார் வான் அசிசாவும், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ரபிசி ரம்லியும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் அறிவித்திருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து அவர் நாடாளுமன்றத்திற்குத் திரும்ப எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனது சொந்த மாநிலமான பினாங்கில்தான் அன்வார் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பினாங்கில் 2 தொகுதிகள் அன்வார் போட்டியிட அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

அன்வாரின் சொந்தத் தொகுதியான பெர்மாத்தாங் பாவ், அல்லது பிகேஆர் 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற நிபோங் திபால் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒன்றை அன்வார் தேர்ந்தெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத்தில் அன்வாரில் மகள் நுருல் இசா மே 9 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். ஆனால், நுருல் இசா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர் மற்ற எந்த நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிட முடியாது என்பதால் அன்வார் பெர்மாத்தாங் பாவ் தொகுதியைத் தேர்ந்தெடுக்கமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிகேஆர் வென்ற தொகுதி ஒன்றில்தான் அன்வார் போட்டியிடுவார் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அவர் அநேகமாக நிபோங் திபால் தொகுதியில்தான் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது,