Home நாடு பி.கே.ஆர் கட்சி உதவித் தலைவர் பொறுப்பிலிருந்து நூருல் இசா விலகினார்!

பி.கே.ஆர் கட்சி உதவித் தலைவர் பொறுப்பிலிருந்து நூருல் இசா விலகினார்!

2073
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக நூருல் இசா இன்று அறிவித்தார். அறிக்கை ஒன்றின் வாயிலாக அவரது பதவி விலகலை உறுதிப்படுத்தியதோடு, குறுகிய நேரத்தில் எடுக்கப்பட்ட இம்முடிவானது வருத்தத்திற்கு உரியதாகவும், சிரமமான ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், அரசாங்கத்தில் இனி சேவையாற்றப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தனது அரசியல் பயணத்தை 1998-ல் தொடங்கிய நூருல், பெரும்பாலும் அரசியல் விழிப்புணர்வு குறித்த அறிவினை மக்களிடத்தில் நிலை நிறுத்தத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். பின்பு, கட்சியில் முக்கியப் பதவியில் தனது பங்கினை வகித்தார். இது வரையிலும் தனக்கு ஆதரவாக இருந்த அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் நூருல்.    

#TamilSchoolmychoice

பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் தொடர்ந்து மக்களுக்காக தனது பணியைச் செயல்படுத்துவேன் என்றும், கட்சியில் சாதாரண உறுப்பினராக தனது பங்கு என்றும் இருக்கும் என்றும் தெரிவித்தார்.