பேங்காக்: மேற்கு ஜெருசேலம் இஸ்ரேலின் தலைநகரம் என ஆஸ்திரேலியா அங்கீகரித்ததற்கு பிரதமர் துன் மகாதீர் முகமட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பல ஆண்டுகளாக இவ்விவகாரத்தில், ஜெருசேலத்தை அவரவர் தலைநகராக்க உரிமை கொண்டாடி வருகிறார்கள்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிக்கையை ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் வெளியிட்டுள்ளார். இது குறித்துப் பேசிய பிரதமர், அவ்வாறு அறிவிப்பதற்கு ஆஸ்திரேலியாவுக்கு எவ்வித உரிமையும் இல்லை எனத் தெரிவித்தார்.
கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்ச நிலை மாநாட்டின் போது, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை சந்தித்து, இஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரிப்பதன் மூலம் ஏற்படவிருக்கும் விளைவை பிரதமர் பேசியதாகக் குறிப்பிட்டார்.
இவ்விவகாரம் குறித்த வார்த்தைகள் மிகக் கவனமாகக் கையாளப்பட்டிருந்தாலும் பெரும்பாலான அரேபிய நாடுகளின் பார்வைக்கு இம்முடிவு ஏற்கத்தக்க முடிவாக இருக்காது என அவர் சுட்டிக்காட்டினார்.