Home அவசியம் படிக்க வேண்டியவை சிங்கப்பூர்-ஈப்போ இடையே விமான போக்குவரத்து – டைகர்ஏர் முடிவு!

சிங்கப்பூர்-ஈப்போ இடையே விமான போக்குவரத்து – டைகர்ஏர் முடிவு!

473
0
SHARE
Ad

tigerairway0சிங்கப்பூர், ஏப்ரல் 3 – சிங்கப்பூரின் மலிவு விலை விமான நிறுவனமான டைகர் ஏர்வேஸ், சிங்கப்பூர்-ஈப்போ நகரங்களுக்கு இடையே விமான போக்குவரத்தைத் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் டைகர் ஏர்வேஸ் நிறுவனம், இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

“எதிர்வரும் மே மாதம் 29-ம் தேதி முதல் சிங்கப்பூர்-ஈப்போ இடையே விமான போக்குவரத்தைத் தொடங்க இருக்கின்றோம். இதற்கான கட்டண முன் பதிவு ஏப்ரல் 20-ம் தேதி முதல் தொடங்கும். திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு என வாரத்தில் நான்கு நாட்களுக்கு இந்த விமான போக்குவரத்து இருக்கும்” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்த விமான போக்குவரத்தை ஏர்பஸ் 320 விமானங்கள் மூலம் வழங்க முடிவு செய்துள்ள டைகர்ஏர், வாரத்திற்கு 1440 பயணிகள் வீதம் இந்த சேவையை தொடர இருக்கின்றது. ஏற்கனவே டைகர்ஏர் கோலாலம்பூர், பினாங் மற்றும் லங்காவி நகரங்களுக்கு விமான சேவை வழங்குவது குறிப்பிடத்தக்கது.