Home Featured உலகம் பயணி மரணம்: டைகர் ஏர் விமானம் பாங்காக்கில் அவசரத் தரையிறக்கம்!

பயணி மரணம்: டைகர் ஏர் விமானம் பாங்காக்கில் அவசரத் தரையிறக்கம்!

626
0
SHARE
Ad

tigerairway0சிங்கப்பூர் – சியாங் மாய் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூரை நோக்கி வந்து கொண்டிருந்த டைகர் ஏர் விமானத்தில், சிங்கப்பூரைச் சேர்ந்த பயணி ஒருவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்ததால், அவ்விமானம் பாங்காக்கில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தாய்லாந்தைச் சேர்ந்த தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சிங்கப்பூருக்குப் பயணமான அந்த 58 வயதான பயணி, விமானத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அப்பயணியின் மனைவி அளித்த தகவலின் படி, கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனது இருக்கையிலேயே மயங்கி விழுந்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதனை அறிந்த விமானி, உடனடியாக பாங்காக்கில் உள்ள சுவர்ணபூமி விமானநிலையத்தில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்கி தேவையான மருத்துவ சிகிச்சைகளை செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.

எனினும், அப்பயணி மரணமடைந்துவிட்டதாக முன்னணி இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.