சென்னை – ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ளதால் அடுத்து என்ன? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அவசரச் சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு இருப்பதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், ஜெயா அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தால், மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் மிக விரைவில் ஜெயலலிதா அமைச்சரவையை கூட்டி அவசரச் சட்டம் இயற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.