Home நாடு அல்தான்துயாவை கொல்லச் சொல்லியது யார்? – மகாதீர் கேள்வி

அல்தான்துயாவை கொல்லச் சொல்லியது யார்? – மகாதீர் கேள்வி

648
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 3 – மங்கோலியன் அழகி அல்தான்துயா ஷாரிபுவை கொல்லுமாறு உத்தரவிட்டது யார்? என்று மக்கள் இன்னும் யோசித்துக் கொண்டிருப்பதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

Mahathir

முன்னாள் காவல்துறை அதிகாரி சைருல் அசார் உமார் கூறுவதை வைத்துப் பார்க்கும் பொழுது, இந்த கொடூரக் கொலையில் மறைந்திருக்கும் பின்னணியை கண்டறிய வேண்டும் என்றும் மகாதீர் தனது வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“ஆனால் சைரும் கூறும் அனைத்தையும் நஜிப் (பிரதமர் நஜிப் துன் ரசாக்) மறுப்பதோடு அதை குப்பை என்கிறார். அதற்கு மேல் அதில் விசாரணை ஒன்றும் இல்லை. இது ஒரு மனித வாழ்வு சம்பந்தப்பட்டது. தனக்கு அளிக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்றியதற்காக சைருல் மரண தண்டனையைப் பெறுவது மிகவும் கொடுமையானது” என்று மகாதீர் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதியான சைருல் தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கின்றார்.

அவர் மலேசியாகினிக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், தனக்கு விதிக்கப்பட்ட கட்டளையை மட்டுமே தான் நிறைவேற்றியதாகவும், ஆனால் அல்தான்துயாவை கொல்லும் நோக்கில் அந்த கட்டளைகளைப் பிறப்பித்தவர்கள் இன்னும் பெரிய அளவில் தான் இருக்கின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.