கோலாலம்பூர், ஏப்ரல் 3 – பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஹிண்ட்ராப் தாக்கல் செய்திருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த மார்ச் 30-ம் தேதி, இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த 1957-ம் ஆண்டு மலாயா விடுதலை அடைந்த போது, அதற்கு முன்னும், பின்னும் பிரிட்டிஷ் மகாராணி சட்டப்பூர்வமாக தனது கடமைகளை தான் நிறைவேற்றியுள்ளார் என்று அறிவித்துள்ளது.
மேலும், மலாயாவிற்கு கொண்டு வரப்பட்ட இந்திய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு செயலையும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் செய்யவில்லை என்றும் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி நிக்கோலஸ் ப்ளேக் குறிப்பிட்டுள்ளார்.