Home Featured நாடு பெர்லிஸ் முப்தி விவகாரம்: இந்துக்கள் அமைதி காக்குமாறு வேதமூர்த்தி வலியுறுத்து!

பெர்லிஸ் முப்தி விவகாரம்: இந்துக்கள் அமைதி காக்குமாறு வேதமூர்த்தி வலியுறுத்து!

871
0
SHARE
Ad

waytha moorthyகோலாலம்பூர் –  பெர்லிஸ் முப்தி விவகாரத்தில், மலேசியாவில் வாழும் இந்துக்கள் அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என ஹிண்ட்ராஃப் கேட்டுக் கொண்டிருக்கிறது.

காரணம், பெர்லிஸ் முப்திக்கு எதிராக நட்பு ஊடகங்களில் கருத்துக்களைப் பதிவிட்டவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இந்நிலையில், இது குறித்து ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் தலைவர் பொன்.வேதமூர்த்தி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மலேசியாவில் வாழ்கின்ற இந்துப் பெருமக்கள் அனைவரும் அமைதி காத்து பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.”

#TamilSchoolmychoice

“காவல் துறையினர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையில் இருந்து ஹிண்ட்ராஃப் விலகி இருக்கவே விரும்புகிறது. அத்துடன், சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையிலும் வன்முறை-குற்றவியல் நடவடிக்கையிலும் ஹிண்ட்ராஃப் இயக்கத்திற்கு எப்போதும் உடன்பாடில்லை.”

“இப்படிப்பட்ட நிலையில், பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரிக்கு எதிராக கருத்துப் பதிவிட்டவர் மீது போலீஸ் மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் இருந்து ஹிண்ட்ராப் விலகி இருக்கும் அதேவேளை, குற்றம் நிரூபிக்கப்படும்வரை ஒருவர் நிரபராதிதான்.”
“இந்து சமய சிந்தனையை மனதில் கொண்டு வாழ்பவர்கள், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையிலோ குற்றச் செயல்களிலோ ஈடுபவதில் இருந்து விலகி இருக்க வேண்டும்.”

“இந்து சமயத்தையும் இந்து வழிபாட்டு உருவங்களையும் சிறுமைப்படுத்தி, ‘பார்வதி மாற்றானுடன் படுத்திருந்ததால்தான் விநாயகர் பிறந்தார்’ என்று பகிரங்கமாக கருத்து வெளியிட்ட பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரிக்கு எதிராக, நாமும் மூர்க்கத்தனத்துடன் செயல்படுவது அழகல்ல; இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்களுக்கென்று சில நன்னெறி, பண்பாட்டுக் கூறுகள் உண்டு.”

“ஆனாலும், சட்டத்திற்கு உட்பட்டு எப்படி செயல்பட வேண்டுமோ அந்த வகையில் இருந்து ஹிண்ட்ராஃப் ஒருபோதும் பின்வாங்காது. அந்த வகையில், இந்த நாட்டில் காலங்காலமாக பேணப்படும் இன-சமய நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைக்கும் ஜாஹிர் நாய்க், இந்து சமயத்தை இழிவுபடுத்தியுள்ள பெர்லிஸ் முப்தி முகமட் நஸ்ரி ஆகியோருக்கு எதிராக சட்ட ரீதியாகவும் ஜனநாயக அடிப்படையிலும் எதிர்ப்பு தெரிவிப்பதில் இருந்து ஹிண்ட்ராஃப் இயக்கம் ஒருபோதும் பின்வாங்காது” என்று முன்னாள் துணை அமைச்சரும் வழக்கறிஞருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்திருக்கிறார்.