Home இந்தியா ரூ,600-ல் மோடியின் வாழ்க்கையை விளக்கும் சுற்றுலா திட்டம் அறிமுகம்!

ரூ,600-ல் மோடியின் வாழ்க்கையை விளக்கும் சுற்றுலா திட்டம் அறிமுகம்!

580
0
SHARE
Ad

Narendra-Modi2அகமதாபாத், ஏப்ரல் 7 – ரூ,600-ல் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த ஊர், அவர் டீ விற்ற ரெயில் நிலையம் மற்றும் அவருடைய வாழ்வில் தொடர்பான பிற இடங்களையும் பார்வையிட 600 ரூபாயில் சுற்றுலா அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடியின் சொந்த ஊரான வாத்நகர் கிராமத்திற்கு சென்றுவர, குஜராத் மாநில சுற்றுலாத் துறை(TCGL) சார்பில் ரூ. 600-ல் சிறப்பு சுற்றுலா அறிவிக்கப்பட்டு உள்ளது. மெக்சனா மாவட்டம், வாத்நகர் கிராம் செல்ல தலா ஒருவருக்கு ரூ. 600 வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகள் இடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.  குஜராத் மாநில அரசால் நிர்வாகிக்கப்படும் டி.சி.ஜி.எல். தனது இணையதளத்தில் சுற்றுலா தகவல்களை அறிவித்து உள்ளது.

#TamilSchoolmychoice

வைப்ரண்ட் குஜராத் 2015 மாநாடு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றபோதே இது தொடங்கப்பட்டது.  சுற்றுலா அகமதாபாத், காந்திநகரில் இருந்து தொடங்கும்.

சுற்றுலா செல்பவர்கள் மோடி சொந்த கிராமமான வாத்நகர், மோடி படித்த பள்ளிக்கு அழைத்து செல்லப்படுவார்கள். மோடி படிக்கும்போது பல்வேறு நாடங்கள், மேடை நிகழ்ச்சியில் சிறப்பித்த  உயர் நிலைப்பள்ளிக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

“பிரதமர் மோடி குறித்து மேலும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் அவருடைய பள்ளி நண்பர்களை சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் பிரதமர் மோடியுடன் படித்த அனுபவம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்வார்கள்”.

‘சுற்றுலா வருபவர்களை பிரதமர் மோடி வழிப்பட்ட காத்கேஷ்வார் கோவிலுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்” என்று சுற்றுலாத் துறையின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.