Home இந்தியா பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி!

பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி!

647
0
SHARE
Ad

modi-trip-story_650_041015095008 (1)புதுடெல்லி, ஏப்ரல் 10 – 3 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றார். 3 நாடுகள் சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக நேற்று மாலை டெல்லியில் இருந்து பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசுக்கு தனி விமானத்தில் புறப்பட்டார்.

அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மூத்த அதிகாரிகள் குழுவினரும் சென்றனர். நேற்று இரவு பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றடைந்தார். அவரை அந்நாட்டு அதிகாரிகள், பிரான்ஸ் நாட்டு இந்தியர்கள் வரவேற்றனர்.

பாரீசில் அதிபர் மாளிகையில் இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடிக்கு சம்பிரதாயப்பூர்வ முறையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாலையில் பிரதமர் மோடி, அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டேயுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன் பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளிக்கவுள்ளார்.