Home உலகம் அணு ஆயுத விவகாரம்: வல்லரசு நாடுகளுக்கு ஈரான் நிபந்தனை!

அணு ஆயுத விவகாரம்: வல்லரசு நாடுகளுக்கு ஈரான் நிபந்தனை!

590
0
SHARE
Ad

iran-mapஅங்காரா, ஏப்ரல் 10 – ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்காகத்தான் அணுசக்தி திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்று பல வருடமாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வந்தன. ஈரான் அதை மறுத்து வந்தது.

மின்சார உற்பத்திக்காகத்தான் அணுசக்தி திட்டங்களை தீட்டி நிறைவேற்றி வருவதாக அந்த நாடு கூறியது. இருந்தபோதிலும், அதை ஏற்காமல் அந்த நாட்டின் மீது அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தன. இதனால் அந்த நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்தது.

ஈரானின் அணுசக்தி திட்டங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக நீண்ட காலமாக பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. கடைசியாக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள லுசானே நகரில் ஈரானுடன் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, சீனா ஆகியவை பேச்சுவார்த்தை நடத்தின.

#TamilSchoolmychoice

நீண்ட பேச்சு வார்த்தையின் முடிவில், கடந்த 2-ஆம் தேதி உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி ஈரானில் யுரேனியத்தை செறியூட்டி, அணு குண்டாக மாற்ற பயன்படும் ‘சென்ட்ரிபியூஸ்’ மெனும் அமில எண்ணிக்கை மூன்றில் இரு பங்குக்கும் கீழாக குறைக்கப்படும்.

அடுத்த 15 ஆண்டுகளுக்கு 3.67 சதவீதத்துக்கு அதிகமாக யுரேனியத்தை செறிவூட்டக் கூடாது, ஜூன் 30-ஆம் தேதிக்குள் இறுதி உடன்பாட்டினை செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் அனைத்துலக அளவில் வரவேற்பை பெற்றது.

தன் மீதான பொருளாதார தடைகளை ஒட்டு மொத்தமாக அகற்றி விட வேண்டும் என்பது ஈரானின் எதிர்பார்ப்பு. ஆனால் இறுதி அணுசக்தி உடன்பாட்டின் கீழ், பொருளாதார தடைகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடாக உள்ளது.

இந்த நிலையில் ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி, நாட்டு மக்களுக்கு நேற்று தொலைக்காட்சி உரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது; “இறுதி ஒப்பந்தம் ஏற்படுத்துகிற நாளில், அனைத்து பொருளாதார தடைகளையும் அகற்றி விட வேண்டும். அப்போதுதான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம்”.

“இந்த அணுசக்தி உடன்பாட்டில் பங்கு பெற்ற அனைத்து தரப்பினருக்கும் வெற்றி என்ற நிலை வேண்டும்” என கூறினார். ஈரானின் இந்த திடீர் நிபந்தனை, அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, சீனா ஆகியவற்றுக்கு கடும் அதிர்ச்சியை தந்துள்ளன.