எதிர்க்கட்சி உறுப்பினர்களே எதிர்க்கட்சித் தலைவரை நிர்ணயிக்க வேண்டும். நாடாளுமன்றின் கடந்த கால நடவடிக்கைகளின் அடிப்படையில் சபாநாயகர் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
காமினி திஸாநாயக்க, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோரிய போது இது குறித்து தீர்மானிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியிடம் அப்போதைய சபாநாயகர் பொறுப்பினை ஒப்படைத்தார். இரகசிய வாக்கெடுப்பு நடத்தி அதிக வாக்குகளைப் பெற்றுக்கொண்டவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
கூடுதலானவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொண்ட ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டிய பொறுப்பு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரது கடமையாகும். அதிகமானர்கள் விரும்பும் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவார் என முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே நேற்று தெரிவித்துள்ளார்.