இந்த நிலையில் விஜய் நடிப்பில் உருவாகும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு அங்குள்ள காட்டுப் பகுதியான, தலைக்கோணை நீர்வீழ்ச்சியில் நடைபெற்று வருகிறது. விஜய்யுடன், நடிகை சுருதிஹாசன், பிரபு மற்றும் துணை நடிகர், நடிகைகள் உட்பட சுமார் 300 பேர் அந்த பகுதியில் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக ரூ.1 கோடி செலவில் பிரமாண்ட அரங்கம் அந்த பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. போலீசாரின் தாக்குதலில் தப்பிய செம்மரக் கடத்தல்காரர்கள், விஜயின் புலி படத்தின் படப்பிடிப்பில் கலந்திருக்கலாம், என்று சந்தேகப்பட்டு,
படப்பிடிப்பு தளத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுனர். சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆயுத மேந்திய போலீசார் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதால், படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.