Home அவசியம் படிக்க வேண்டியவை பெர்மாத்தாங் பாவை தக்க வைப்பது அவ்வளவு எளிதல்ல – பக்காத்தானுக்கு லிம் எச்சரிக்கை

பெர்மாத்தாங் பாவை தக்க வைப்பது அவ்வளவு எளிதல்ல – பக்காத்தானுக்கு லிம் எச்சரிக்கை

499
0
SHARE
Ad

ஜோர்ஜ்டவுன், ஏப்ரல் 13 – பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் எளிதில் வென்று விடலாம் என்ற அதிக நம்பிக்கையோடு இருக்க வேண்டாம் என பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் பக்காத்தான் கூட்டணி கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

articles27062013_Lim_Guan_Eng2_600_454_100

இந்த இடைத்தேர்தலில் பெர்மாத்தாங் பாவ் தொகுதியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தேசிய முன்னணி அதற்கான நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருகின்றது.

#TamilSchoolmychoice

நேற்று துணைப் பிரதமர் டான்ஸ்ரீ முகைதின் யாசின், தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளுடன் அதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

இது குறித்து லிம் குவான் எங் கூறுகையில், “இந்த இடைத்தேர்தலில் பக்காத்தானுக்கும், தேசிய முன்னணிக்கும் வெற்றியடைய 50/50 வாய்ப்புகள் இருப்பதாக தெரிகின்றது. எனவே சுலபமாக வென்றிடலாம் என்ற எண்ணத்தில் இருந்து விடாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.