Home நாடு நஜிப்பை ஆதரிக்காவிட்டால் முக்ரிஸ் பதவி விலக வேண்டும் – அகமட் லெபாய்

நஜிப்பை ஆதரிக்காவிட்டால் முக்ரிஸ் பதவி விலக வேண்டும் – அகமட் லெபாய்

524
0
SHARE
Ad

ஏப்ரல் 13 – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பை ஆதரிக்காவிட்டால் கெடா மந்திரி பெசார் பதவியில் இருந்து டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் விலக வேண்டும் என அம்மாநில சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அகமட் லெபாய் சுடின் வலியுறுத்தி உள்ளார்.

பிரதமர் நஜிப்புக்கு அம்னோ தலைவர்கள் பலரும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், முக்ரிஸ் மகாதீர் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து அவரது இந்த நிலைப்பாடு விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது.

Mukhriz_Mahathir

#TamilSchoolmychoice

“ஒருவரை மந்திரிபெசார் பதவியில் தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நியமிப்பது பிரதமர் தான். அவரை இனிமேல் ஆதரிக்கப் போவதில்லை என்றால் அந்தப் பதவியில் இருந்து விலகுவதுதான் நல்லது,” என்று புக்கிட் லாடா சட்டமன்ற தொகுதி உறுப்பினரான அகமட் லெபாய் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமையன்று கெடா மாநில அம்னோ தலைவர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அகமட் லெபாய் மேற்கண்டவாறு கூறினார்.

“இந்தக் கூட்டத்தில் பேசிய மந்திரி பெசார் முக்ரிஸ் 1எம்டிபி கணக்கு தணிக்கை விசாரணைக்குப் பிறகே பிரதமருக்கான தனது ஆதரவு குறித்த முடிவை வெளியிடப் போவதாக கூறினார். அந்நிறுவனத்தில் எந்த தவறான செயல்பாடுகளும் நடக்கவில்லை என உறுதியான பிறகே பிரதமர் நஜிப்பை ஆதரிக்க இயலும் என்றும் அவர் கூறினார். இந்த நிறுவனத்தின் செயல்பாடு என்பது நஜிப்பின் தலைமைத்துவத்திற்கான ஓர் அளவுகோல் அல்ல. ஏதேனும் தவறு நடந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமரே கூறியுள்ளார். ”

“கூட்டம் தொடங்குவதற்கு முன்னர், பிரதமருக்கு ஆதரவு தெரிவிக்கவே அக்கூட்டம் நடைபெறுவதாகக் கூறப்பட்டது. ஆனால் கூட்டம் நடந்தபோது, தான் மக்களின் பகக்ம் இருக்கப் போவதாக மந்திரி பெசார் கூறுகிறார். அவர் எந்த மக்களைக் குறிப்பிடுகிறார்? ஏனெனில் ஏராளமான மக்கள் பிரதமர் நஜிப்பை ஆதரிக்கிறார்கள்,” என்றார் அகமட் லெபாய்.