Home நாடு தேமு தோல்வி கண்டால் பலர் மீது வழக்கு பாயும் – மகாதீர்

தேமு தோல்வி கண்டால் பலர் மீது வழக்கு பாயும் – மகாதீர்

444
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 13 – அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வி கண்டால் பலர் மீது வழக்கு தொடுக்கப்படும், நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்படும் என துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், பிரதமர் நஜிப் உடனடியாகப் பதவி விலகவில்லை எனில், 1எம்டிபி நிறுவன ஊழல் காரணமாக தேசிய முன்னணி அடுத்த தேர்தலில் தோல்வி காணும் என தாம் அஞ்சுவதாகக் கூறியுள்ளார்.

Dr Mahathir

#TamilSchoolmychoice

“அவர் (நஜிப்) பதவி விலகினால் அடுத்த தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெறும். எனவேதான் அவரது பதவி விலகல் இப்போதே நிகழ வேண்டும். ஏனெனில் தேசிய முன்னணி மீண்டு வரவும், பல பணிகளைக் கவனிக்கவும் 2 ஆண்டுகள் நமக்கு கிடைக்கும்.”

“ஒருவேளை நாம் தோற்று, எதிர்க்கட்சி வெற்றி பெற்றால், எதிர்க்கட்சியிடம் சிறிதும் இரக்கம் இருக்காது என அஞ்சுகிறேன். அவர்கள் விடைகளை தேட முயற்சிப்பார்கள். அப்படி நடக்கும் பட்சத்தில் பலர் மீது நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்படும். பலர் குற்றவாளிகள் எனவும் அறியப்படலாம். எனவே தேசிய முன்னணி தோற்றால், பலர் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்,” என்றார் மகாதீர்.

1எம்.டி.பி., நிறுவனம் குறித்த விசாரணையை முடிக்க பல ஆண்டுகளாகும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அடுத்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியை தோல்வியில் இருந்து தற்காக்க வேண்டுமானால் நஜிப் இப்போதே பதவி விலகுவது நல்லது என்று தெரிவித்தார்.