Home கலை உலகம் ஹானியின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு – இயக்குநர் வெங்கட் பிரபு

ஹானியின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு – இயக்குநர் வெங்கட் பிரபு

641
0
SHARE
Ad

venkat-prabhuகோலாலம்பூர், ஏப்ரல் 13 – புற்றுநோயால் இன்று காலமான மலேசிய நடிகை ஹானி சிவ்ராஜின் குடும்பத்தினருக்கு இயக்குநர் வெங்கட் பிரபு தனது வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெங்கட் பிரபு கூறுகையில் , “என் அன்பு ஹானி குடும்பத்தாருக்கு… இப்படி ஒரு சக்தி வாய்ந்த பெண்ணை வாழ்வில் சந்தித்ததை நினைத்து மகிழ்ச்சியடைந்தேன். அவளது தன்னம்பிக்கை மற்றவர்கள் பொறாமைப்படும் படியாக இருந்தது. அவளிடம் இருந்த இனிமையும், அன்பாக பழகும் முறையும் உங்கள் பெண்ணை எந்த குறையும் இன்றி நல்ல பெண்ணாக வளர்த்திருக்கிறீர்கள் என்று தெரிந்தது. பிரியாணி படத்தில் அவளுடன் பணியாற்றும் வாய்ப்பு அமைந்தது எனக்கு கிடைத்த மரியாதை. அவர் ஒரு திறமையான நடிகை. அவர் மறைவு அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். உங்களது துயரத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என்பதை அறிவேன். நானும் எனது குடும்பமும், உங்களது குடும்பத்தோடு இணைந்து அவளுக்காக பிரார்த்தனை செய்கின்றோம். எனது ஆழ்ந்த இரங்கல்கள்” இவ்வாறு வெங்கட் பிரபு கூறியுள்ளதாக பிரபல ‘இந்தியாகிளிட்ஸ்’ இணையதளம் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஹானி சிவ்ராஜின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் 3 மணியளவில் , பிஜே கம்போங் துங்குவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

பெரும்பாலான மலேசியக் கலைஞர்கள் அதில் பங்கேற்று தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.